Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

300+Variety Of Mango on single Tree and All year Gauva Plant?

Register

Click Here!

rishab308

New Member
Anyone please give me address of Abdullah Nursery/Kaleemullah Khan;Hamidullah Khan’s Nursery Malihbad somewhere in Uttar Pradesh. Where I could buy Mango plant which produce 300+variety of Mango on same plant and a Guava plant which All year produce Guava plants in bulk.
 

Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)


Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)


Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

315 mango varaities at one tree

315 வகை மாம்பழம் அதுவும் ஒரே மரத்தில்
Posted on March 8, 2011 by vidhai2virutcham
ஒரு மரத்தை, “பரிசோதனை சாலை’ என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்க த்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத் தான், “பரிசோதனை சாலை’ என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படு த்திக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்ப ழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.
மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு, இயற்கையின் கருணை அதிகம். மாம்பழ சீசனில் இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம், விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின், 14 ஏக்கர் மாம் பழங்களும், 15 நாட் களில் விற்றுத் தீர்ந்து விடும்.
இந்த தொழி லில், 17 வயது பைய னாக, 1957ல் நுழைந்தவர் கலி முல்லாகான். ஏழாம் வகுப்பில் தோல்வி அடைந் ததும், படிப் புக்கு, “குட்- பை’ சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழி லான மாம்பழ சாகுபடியை ஏற்றார்.
அப்போதே தன்னுடைய மரத்தில், ஏழு வகையான மாம்பழங் களை உருவாக்கி, அசத்தினார். ஆனால், இயற்கை சதி செய்தது. கடும் மழையும், வெள்ளமும் ஏற் பட்டு, அந்த பகுதியே நாச மானது. இதனால், கலங்கிப் போய் ஓடி விடாமல், புதிதாக கடன் வாங்கி, வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.
மாம்பழம் மூலம் பணம் சேர்ந்ததும், 1987ல் புது முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய மாமரம் ஒன்றில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார்.
நான்காவது வருடம், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியா வே வியந்தது.
அதன் மூலம் வருடா வருடம், அந்த மரத்தில் பழங்களின் எண்ணி க்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதில், என்ன சிறப்பு என்றால், ஒரே கிளையில் மூன்று வகையான மாம் பழங்கள் தொங்கி, பார்ப்போரை அசத்தும். அத்தனை வகை மாம் பழங்களையும், தனித்தனியாக கண்டுபிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவது இவரின் தனிச்சிறப்பு.
ரசாயன மருந்துகள், பூச்சி மருந்துகள் கலப்பு உரங்களை, தன் மரங்களில் பயன்படுத்துவதில்லை. மாறாக வேப்ப எண்ணையை பயன்படுத்துகிறார். “ரசாயன உரங்களை வைப்பது, சொந்த குழந்தையை கொல் வதற்கு சமம்; அதை, ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.
“துபாயும், அபுதாபி யும் என்னை, தங்கள் நாட்டிற்கு வந்து, மாம் பழம் பயிரிட இருகரம் கூப்பி அழைக்கின்றன. எனக்கு பணம் பெரி தல்ல; அதனால், அங்கெல்லாம் செல்ல மாட்டேன். அதே சமயம், ஒரு வருத்தம் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை என்னுடைய வாரிசுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆனாலும், எனக்கு பிறகு, என்னுடைய ஆராய்ச்சியும், புதைக்கப்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது…’ என்கிறார் கலிமுல்லா கான்.

* மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
* சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் (டெண்டுல்கர்) என பெயரிட்டார்.
*இவருடைய தோப்பில், மூன்று ஆயிரம் கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றிலும், புதுமை களை செய்து, வித்தியாசமான ரகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில், தற்போது, படு சுவையான ஒரு கொய்யாவை உருவாக்கியுள்ளார். இதற்கு, ஆப்பிள் போன்ற கவர்ச்சி உள்ள தால், “ஐஸ்வர்யா ராய்’ என பெயரிட்டுள்ளார்.
* இந்தியாவின் பிரபல நகரங்களில் மாம்பழ கண்காட்சி நடக்கும் போது, இவருக்கு சிறப்பு அழைப்பு வந்துவிடும்.
* இந்த, 315 வகையான வித்தியாசமான மாம்பழங்களை ஒரே மரத் தில், வருடத்தில், 15 நாட்கள் மட்டுமே காண முடியும். மற்றொரு மரத்தில், 150க்கும் அதிகமான வகை மாம்பழங் களை உருவாக்கியுள்ளார்.
இவற்றில் அல்போன்சா, லங்ராஸ், ஹிம்சாகர், பங்கனபள்ளி, நீலம், மல்கோவா என அனைத்து வகைகளும் அடக்கம். ***
- ராஜி ராதா
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

thanks
with regards
Babu
 

Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

rishimalda

New Member
300+ Variety of Mango and Guava

Please contact Hajimullah Khan,Malihabad, Lucknow on

Rishi
 
Last edited by a moderator:

Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

rishab308

New Member
Moderator A the info was not his But of someone else!!
Can you please read threads properly???
And Indian Pearl Company is spamming around what about that above in this post??
 

Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

Top