Stall-fed Goat farm-Kungumam magazine Article

mr_boer

Active Member
Stall-fed Goat farm-Kungumam Magazine Article



The Below article is published in Kungumam magazine in "ROLL MODEL"Column about our farm,(Vijay Goat Farms)
I am publishing this for the intrest of persons starting new Goat farms.
Contact me with the following details if you need more details.

K.Venkatesh
Vijay farms,Villupuram dist, Tamilnadu.
VIJAY FARMS » A Premier Goat Farm
Mail:venky_km@yahoo.com
Mob:08903471006
09843071006
04146-230218

ரோல்மாடல்


பிசியோதெரபி முடிச்சதும் விழுப்புரத்தில கிளினிக் வச்சேன். நல்ல வரவேற்பு. ஓரளவுக்கு வருமானமும் கிடைச்சுச்சு. ஆனா, மனசு ஒட்டவேயில்லை. அமெரிக்காவுல இருந்த அண்ணனுக்குப் போன் பண்ணி சொன்னேன். ‘இங்கே வந்திடு.. நிறைய வேலையிருக்கு’ன்னார். என் மனைவி கஜலெட்சுமிக்கு பிரெஞ்சு குடியுரிமை உண்டு. அதனால பிரான்ஸ் போகச் சொல்லி சொன்னாங்க. தலைமுறை தலைமுறையா உயிர்கொடுத்து, உணவுகொடுத்து, கல்விகொடுத்து ஆளாக்கின இந்த மண்ணையும், மனுஷங்களையும் விட்டுட்டுப் போய்த்தான் பிழைக்கணுமாங்கற கேள்வி எழுந்துச்சு. வாய்ப்பையும், வசதியையும் தேடி எல்லாரும் ஓடிக்கிட்டேயிருந்தா இங்கே என்ன மிஞ்சும்? இங்கேயே இருந்தபடி மனசுக்குப் புடிச்ச ஒரு தொழிலைச் செய்ய முடியாதான்னு யோசிச்சேன். டிரவுசரை மாட்டிக்கிட்டு வயலுக்குள்ள இறங்கிட்டேன்...’’ - சொல்லி சிரிக்கிறார் வெங்கடேஷ். விழுப்புரம் அருகேயுள்ள திருநந்தி புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயத்தில் ஏகப்பட்ட முன்முயற்சிகளை எடுத்து வெற்றிபெற்றவர். தற்போது ஆட்டுப்பண்ணை நடத்துகிறார். போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, ஜிரோகி, பீட்டல், கரோலி, ஜக்ரானா என அரிதான பலரக ஆடுகள் இவரது பண்ணையில் நிறைந்திருக்கின்றன. நூற்றுக் கணக்கான விவசாயிகள் இவரிடம் கற்றுச்சென்று பண்ணையாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். சொந்த கிராமத்திலேயே பிரமாண்டமாக வீடு கட்டி, விவசாய வளத்தை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் இவர்.


‘‘பல நூறு ஏக்கர் நிலத்தில விவசாயம் பண்ணின மிராசுக் குடும்பம் எங்களோடது. படிப்படியா கைவிட்டுப் போயிடுச்சு. அப்பா எங்களை நல்லா படிக்க வச்சார். அப்பா பட்ட கஷ்டங்களைப் பாத்துப் பாத்து வளர்ந்தோம். அண்ணன் சீனுவாசன் பி.இ., எம்.பி.ஏ. முடிச்சுட்டு யு.எஸ்ல செட்டிலாகிட்டார். ரெண்டு சகோதரிங்க. ஒருத்தர் ஆசிரியை, இன்னொருத்தர் சாஃப்ட்வேர் எஞ்சினியர்.


ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ஃபீஸ் கட்டுறப்போ அப்பா ஒவ்வொரு ஏக்கரா விப்பார். மனசுக்குக் கஷ்டமா இருக்கும். விவசாயத்தை வாழ்க்கையாக் கொண்ட எல்லாக் குடும்பங்களும் எதிர்கொள்ற நெருக்கடி இது. எந்தப் பொருளா இருந்தாலும் உற்பத்தி செய்யறவர்தான் விலை வச்சு விக்கிறார். ஆனா விவசாயிங்க தாங்க விளைய வச்சதை, விலை வச்சு விக்க முடியாது. விவசாயம் நஷ்டமானதுக்கு அடிப்படைக் காரணம் இதுதான்.


விவசாயத்துக்கு கால்நடைகள் அடிப்படை. நெல்லை அடிச்சிட்டு வைக்கோலையும், அரிசியை எடுத்துட்டு தவிடையும் உணவா கொடுப்போம். கால்நடைகளோட கழிவு, பயிருக்கு உரம். நவீன விவசாயம், குட்டை ரகங்களை அறிமுகம் செய்ததால வைக்கோல் கிடைக்கலை. இன்னைக்கு அரிசியை விட தவிடு அதிக விலைக்கு விக்குது. அதனால கால்நடை வளர்ப்பே விவசாயிக்கு அந்நியமாயிடுச்சு. விவசாயத்தில லாபம் இல்லாததால அப்பா பால் பண்ணை வச்சார். ஆனா மத்தவங்களை சார்ந்து செய்ய வேண்டியிருந்ததால, அதுல நஷ்டம்தான்’’ என விவசாயத்துக்கு நேர்ந்த நசிவை தன் அனுபவங்களால் காட்சிப்படுத்துகிறார் வெங்கடேஷ்.


‘‘விவசாயம்தான்னு முடிவு செஞ்ச பிறகு, குறைந்த செலவில, தேவைக்கு ஏத்தமாதிரி சாகுபடி பண்ண முடிவு செஞ்சேன். அது ‘குழிக்கரும்பு’ அறிமுகமான நேரம். மத்த விவசாயிகள் தயங்கி நின்னாங்க. தைரியமா நான் பயிரிட்டேன். சாதாரணமா 40 டன் விளையுற இடத்துல 100 டன் எடுத்தேன். அடுத்து சூரியகாந்தியில ‘கிராஸ் பிரீடிங்’ செஞ்சேன். அதுவும் லாபகரமா இருந்துச்சு. அடுத்து இயற்கை வண்ணத்துக்கான சாமந்திப்பூவை போட்டேன். அதுவும் நல்ல விலைக்கு வித்துச்சு.


ஆனா எல்லாத்துலயும் ஒரு சிக்கல் இருந்துச்சு. மார்க்கெட் பண்றது நிறைய சிரமம். இடைத்தரகர், வியாபாரின்னு தூக்கிட்டு அலையணும். விவசாயிக்கும் இல்லாம, வியாபாரிக்கும் இல்லாம கணிசமான ஒரு தொகையை இடைத்தரகர் சாப்பிட்டார். நம்ம செய்யற உற்பத்தியை, நம்மைத் தேடிவந்து, நம்ம சொல்ற விலைக்கு வாங்குற மாதிரி ஒரு தொழில் செய்யணும்னு யோசிச்சப்பதான் ஆட்டுப்பண்ணை ஐடியா வந்துச்சு.


நம் நாட்டு ஆடுகளை மட்டும் வச்சு பண்ணை வைக்க முடியாது. வேகமா வளரணும். 2 அல்லது 3 குட்டி போடணும். போடுற குட்டிக்கு நல்லா பால் கொடுக்கணும். நம்ம தட்பவெப்பத்துக்குத் தகுந்தமாதிரி வளரணும். இதெல்லாம் பாத்துத்தான் ஆடுகளை வாங்கணும். நாட்டு ஆடுகள் வருஷத்துக்கு 8 முதல் 12 கிலோ வளரும். அதுவே தென் ஆப்ரிக்க ‘போயர்’ ஆடு, வருஷத்துக்கு 50 கிலோ வளரும். தலைச்சேரி, ஜமுனாபாரி, ஜிரோகி, பீட்டல், ஜோஷத், கரோலி, ஜக்ரானா... இதெல்லாம் வருஷத்துக்கு 30 கிலோ வரைக்கும் வளரும். உயிர் எடையை வச்சுத்தான் பிசினஸ். அதுக்குத் தகுந்தது போயர்தான். நாட்டு ஆட்டோட உயிர் எடை 200 ரூபான்னா, போயர் 2400 ரூபா. ஒரேஅளவு தீவனம்தான். ஆனா வளர்ச்சி அதிகம்.


விலை குறைவாக் கிடைக்கிற ஆடுகளோட, போயரை கிராஸ் பண்ணி ஒரு கலப்பினத்தை உருவாக்கினா, அதுமூலமா ஆறேழு ஜெனரேஷனுக்கு அப்புறம் ஒரிஜினல் போயரையே உருவாக்க முடியும். இது ஒரு உயிரியல் தத்துவம். முதல்ல 10 போயர் பொட்டை, 6 கிடா வாங்குனேன். தலைச்சேரி, சேலத்து கன்னியாடு, ராமநாதபுரத்துக் கொடியாடு, சிரோகி, ஜமுனாபாரியோட கிராஸ் பண்ணி பாத்தேன். தலைச்சேரியும் போயரும்தான் சரியான இணைன்னு கண்டுபிடிச்சேன். இன்னைக்கு என் பண்ணையில 60 ப்யூர் போயர் ஆடுகள், 200 கலப்பினங்கள், 100 தலைச்சேரி, சிரோகி, ஜமுனாபாரி ஆடுகள் இருக்கு..’’ - பெருமிதமாகச் சொல்கிறார் வெங்கடேஷ்.

பண்ணை சுத்தமாகக் காட்சி
யளிக்கிறது. சட்டங்கள் அடித்து ஆடுகளை உயரத்தில் நிறுத்தியிருக்கிறார். இடையில் உள்ள சந்தில் கழிவுகள் தானாக கீழே விழுந்துவிடுகின்றன. கழிவுகளை 6 மாதத்துக்கு ஒருமுறை அள்ளி, வயலுக்கு உரமாகப் போடுகிறார். தீவனங்களை வயலிலேயே சாகுபடி செய்கிறார். தீவனம் வைக்க மட்டும் இரண்டு ஆட்கள். பண்ணைக்கென்று ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கி, ஒவ்வொரு ஆட்டைப் பற்றியும் தகவல்களை சேமிக்கிறார்.


‘‘ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு நம்பர் இருக்கு. அந்த நம்பரைப் போட்டா ஆட்டோட ஜாதகத்தையே இந்த சாப்ட்வேர் சொல்லிடும். மாதாமாதம் எவ்வளவு செலவு, எவ்வளவு லாபம்னு துல்லியமா ரிப்போர்ட் கிடைக்கும். பலன் தராத ஆடுகளை காட்டிக் கொடுத்திடும். உடனடியா வித்துடுவோம். ரூமுக்குள்ள உக்காந்தே பண்ணையை நிர்வகிக்கலாம்...’’ என்கிற வெங்கடேஷ், இந்த சாஃப்ட்வேரை பிற பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளார்.


‘‘எந்தத் தொழில் செஞ்சாலும் தேவையறிஞ்சு, காலத்துக்குத் தகுந்த மாதிரி செய்யணும். விவசாயமும் அப்படித்தான். ஆட்டுப்பண்ணை விவசாயத்தோட ஒன்றின தொழில். ஒருநாளைக்கு 2 மணி நேரம் ஒதுக்கினா போதும். நிறைய விவசாயிகள் பண்ணைக்கு வர்றாங்க. வளர்ப்பு முறைகளை கத்துக்கொடுக்கிறேன். ஞாயிறு, புதன்கிழமைகள்ல 89034 71006 என்ற நம்பர்ல தகவல் சொல்லிட்டு பண்ணைக்கு வரலாம்’’ என்கிற வெங்கடேஷ், அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணனை விட இங்கே அதிகம் சம்பாதிக்கிறார். அவர் முன்மாதிரி மனிதர் என்பதற்கு அதுவே சான்று.
படங்கள்: அரிதாஸ்
 

Hi mr venkatesh, pls i'm from north & can't read this article. Is this article in English? Pls kindly forward if available. Thks jolly
 

Back
Top